சீனாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து செல்லும் மராத்தான் ஓட்டப்பந்தயம் - 62 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு

May 21 2018 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில், 5 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட படிக்‍கட்டுகளை கடந்து செல்லும் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. 62 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் கலந்துகொண்டனர்.

உலகின் மிக கடினமான மராத்தான் ஓட்டப்பந்தயங்களில் ஒன்றான The Great Wall Marathon சீனாவில் நடைபெற்றது. உலக அதிசயங்களில் ஒன்றான சீன நெடுஞ்சுவர், பல இடங்களில் செங்குத்தான படிக்‍கட்டுகளை கொண்டது. இதன் 5 ஆயிரத்து 164 படிக்‍கட்டுகளைக்‍ கடந்துசெல்லும் மராத்தான் ஓட்டம், கடந்த 1999-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்‍கான ஓட்டத்தில், 62 நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சீன நெடுஞ்சுவர் பார்ப்பதற்கு அழகாக, ஆச்சரியப்படும் வகையில் இருந்தாலும், படிக்‍கட்டுகளின் மேல் ஏறிச் செல்வது மிகவும் கடினமானது என்று இதில் வெற்றிபெற்ற இத்தாலி வீரர் Oscar Perego தெரிவித்துள்ளார். இதற்காக இவர் எடுத்துக்‍கொண்ட நேரம் நான்கு மணி ஒருநிமிடம். மகளிர் பிரிவில் தென்னாஃப்ரிக்‍காவின் Maria Marincowitz சுமார் நான்கரை மணி நேரத்தில் கடந்து சென்று முதலிடம் பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00