ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியல் : 19-வது வயதிலேயே அஃப்கனிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் இடம்பிடித்து சாதனை

Feb 21 2018 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கனிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், 19வது வயதிலேயே, ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்‍கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில், முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அஃப்கனிஸ்தான் கிரிக்‍கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான ரஷித்கான், சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த, ஜிம்பாப்வேக்‍கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்‍கெட் தொடரில், அஃப்கனிஸ்தான் அணி 4க்‍கு ஒன்று என்ற கணக்‍கில் தொடரை வென்று அசத்தியது. இத்தொடரில் சிறப்பாக பந்துவீசிய ரஷித்கான், 16 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்‍கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில், 8 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார். இதேபோல், தென்னாப்பிரிக்‍காவுக்‍கு எதிரான ஒருநாள் கிரிக்‍கெட் தொடரில் அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும், முதலிடத்துக்‍கு முன்னேறியுள்ளார். இருவரும் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதன்முறையாகும். குறிப்பாக, 19 வயதே ஆன ரஷித்கான், மிக இளம் வயதில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். எனினும், தரவரிசையில் இருவரும் 788 புள்ளிகள் பெற்றுள்ளதால், தசம புள்ளிகள் அடிப்படையில், இந்திய வீரர் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00