காஷ்மீரில் நடைபெற்று வரும் ஐஸ் ஹாக்கி போட்டி - முன்னணி அணிகள் பங்கேற்பு

Jan 17 2017 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் உறைபனி சீசனையொட்டி, அங்குள்ள லடாக் பகுதியில், மாநில அளவிலான ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதனை ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் கடும் குளிர் மிகுந்த லடாக் பகுதியில் ஆண்டுதோறும் உறைபனி சீசன் நிலவும் போது ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெறும். இந்த முறையும் இப்போட்டி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் இருந்து பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பனிக்கட்டிகள் மூலம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத இந்தப் போட்டிகளை பலரும் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். நார்வே, ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் இந்த ஐஸ் ஹாக்கி விளையாட்டு, இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே விளையாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00