மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : இந்தியா, பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது

Dec 4 2016 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாங்காக்கில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மகளிருக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, நேபாளம் என 6 அணிகள் பங்கேற்றன. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் களமிறங்கிய மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.

122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆயிஷா ஜாஃபர் 15 ரன்களிலும் ஜாவரியா கான் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் பிஸ்மா அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 20 ஓவர் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மகளிர் அணியினர் பெறும் 4வது தொடர் வெற்றி இதுவாகும். ஆட்ட நாயகியாகவும், தொடர்நாயகியாகவும் மிதாலிராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00