Chappel - Hadlee கோப்பைக்கான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - ஸ்மித்தின் அபார சதத்தால் நியூசிலாந்துக்கு 325 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Dec 4 2016 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஸ்மித்தின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி, 325 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும், Chappel - Hadlee கோப்பைக்கான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர், வார்னருடன் இணைந்த கேப்டன் ஸ்மித் அதிரடியாக ரன்சேர்க்க தொடங்கினார். வார்னர், பெய்லி, மிட்சல் மார்ஷ் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்த போதிலும், மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித், சதம் விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து ரன் சேர்த்து வந்த Head, 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.அணியின் ஸ்கோர் முச்சதத்தை கடந்த நிலையில், ஸ்மித் 164 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்களின் முடிவில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 325 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00