ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா பெயர் சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கம்

Oct 25 2016 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா பெயர், சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஷரபோவா மேல்முறையீடு செய்ததையடுத்து, தடைகாலம், 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வரும் 2017ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி முதல் சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளார். தற்பொழுது அவர் தடைக்காலத்தில் இருந்த போதும், கடந்த வாரம் வெளியான சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது வெளியான தரவரிசைப்பட்டியில் அவரது பெயர் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் 2017ம் ஆண்டு முதல் தொடக்கத்திலிருந்து புள்ளிகள் பெற வேண்டும். எனவே புள்ளிகள் அடிப்படையில் ஷரபோவா அடுத்த ஆண்டு மே 28ம் தேதி தொடங்க உள்ள பிரெஞ்ச் ஓபன்டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00