யூரோ கோப்பை கால்பந்து - நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து - போலந்து பலப்பரீட்சை

Jun 25 2016 8:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணி, போலந்து அணியை எதிர்கொள்கிறது.

15-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், கடந்த 10-ம் தேதி ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுக்கல் உட்பட 24 அணிகள், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்களில் பங்கேற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டங்களின் முடிவில், ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுக்கல் உட்பட 16 அணிகள் சூப்பர்-16 எனப்படும் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர், நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து - போலந்து அணிகள் மோதுகின்றன. பாரீசில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், வடக்கு அயர்லாந்து அணி, Wales அணியை எதிர்கொள்கிறது. நாக்அவுட் சுற்றில் தோல்வியடையும் அணிகள், யூரோ கோப்பையிலிருந்து வெளியேறும் என்பதால் இப்போட்டிகள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00