ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் FIFA அமைப்பு - தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் அதிரடி இடை நீக்கம் - ஒழுங்கு நடவடிக்கைக்குழு நடவடிக்கை

Oct 9 2015 8:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவது தொடர்பான முறைக்கேட்டில் குற்றம்சாட்டப்பட்ட FIFA தலைவர் செப் பிளாட்டர் மற்றும் துணைத் தலைவர் பிளாட்டனி ஆகியோர் அதிரடியாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த குறிப்பிட்ட நாடுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டதிலும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் அளிக்கப்பட்டதிலும், சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அமைப்பின் தலைவர்கள் முறைக்கேட்டில் ஈடுபட்டது கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 5-வது முறையாக FIFA தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுவிட்ஸர்லாந்தின் 79 வயதான செப் பிளாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருப்பினும், அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அப்பதவியில் தொடருவதாக தெரிவித்தார். இதனிடையே, துணைத் தலைவராக இருந்த மைக்கேல் பிளாட்டனியும் இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இந்நிலையில், கால்பந்து நிர்வாகிகளின் முறைகேடுகள் குறித்து FIFA ஒழுங்கு நடவடிக்கை ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தியது. இதன் முடிவில் தண்டனை விவரத்தை நேற்று வெளியிட்டது. ஊழல் புகாரில் சிக்கியுள்ள FIFA தலைவர் செப் பிளாட்டர், துணைத் தலைவர் மைக்கேல் பிளாட்டனி, பொதுச் செயலாளர் ஜெரோம் வால்க்கே ஆகிய 3 பேரும் 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் தண்டனைக் காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00