சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச தடகளப் போட்டிகள் : 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 5 பிரிவுகள் அடங்கிய டெகத்லான் போட்டியில் அமெரிக்க வீரர் முதலிடம்

Aug 29 2015 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச தடகளப் போட்டிகளில், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 5 பிரிவுகள் அடங்கிய Decathlon போட்டியில், அமெரிக்காவின் Ashton Eaton முதலிடம் பிடித்தார்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 7-ம் நாளான நேற்று மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், நெதர்லாந்து வீராங்கனை Dafne Schippers பந்தய தூரத்தை 21 நொடிகள் 63 குறுவிநாடிகளில் கடந்து வெற்றிப்பெற்றார்.

ஆடவருக்கான 110 மீட்டர் தடைதாண்டும் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் Sergey Shubenkov பந்தய தூரத்தை 12 நொடிகள் 98 குறுவிநாடிகளில் கடந்தும், மகளிருக்கான 100 மீட்டர் தடைதாண்டும் இறுதிப்போட்டியில், ஜமைக்காவின் Danielle Williams பந்தய தூரத்தை 12 நொடிகள் 57 குறுவிநாடிகளில் கடந்தும் முதலிடம் பிடித்தனர்.

மகளிருக்கான நீளம் தாண்டும் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் Tianna Bartoletta, 7 புள்ளி ஒன்று நான்கு மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார்.

100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய 5 பிரிவுகளை உள்ளடக்கிய ஆடவருக்கான Decathlon போட்டியில், அமெரிக்காவின் Ashton Eaton அதிக புள்ளிகளை எடுத்து முதலிடம் பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00