ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முன்னேற்றம் - 5 செட்கள் வரை நீடித்த 4வது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் சின்னரை வீழ்த்தி அபாரம்

Jan 23 2023 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் முன்னேறியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் தொடருக்கான தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் இரு செட்களை சிட்சிபாசும், அடுத்த இரு செட்களை சின்னரும் கைப்பற்றினர். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட்டில் அனல் பறந்தது. இதில், சிட்சிபாஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 5வது செட்டை தன்வசமாக்கினார். இதன்மூலம், 6-4, ,6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00