சவுதி அரேபியா கால்பந்து அணி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு : அர்ஜென்டினாவை வென்றதை பாராட்டி சவுதி அரேபிய இளவரசர் அறிவிப்பு

Nov 26 2022 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை தோற்கடித்த சவுதி அரேபிய அணி வீரர்களுக்கு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் சவுதி அரேபியா அணி தனது முதல் ஆட்டத்தில் அசுர பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சந்தித்தது. இந்தப் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை சவுதி அரேபியா தோற்கடித்து வரலாறு படைத்தது. இதனை கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த சாதனையை நிகழ்த்திய வீரர்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக்கார் வழங்கப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபிய இளவரசர் Mohammed bin Salman Al Saud இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது சவுதி அரேபியா வீரர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே உற்சாகத்துடன் அவர்கள் இன்று தங்களது இரண்டாவது ஆட்டத்தில் போலந்து அணியை சந்திக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00