'நாகை 30' கொண்டாட்டத்தையொட்டி மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் - 5 நாட்களுக்கு கொண்டாட மாவட்ட நிர்வாகம் ‍ஏற்பாடு

Oct 18 2021 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகப்பட்டினம் மாவட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் தொடக்கப்பட்டு இருபத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவுற்று, 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை 'நாகை 30' என்ற பெயரில் ஐந்து நாட்களுக்கு கொண்டாட மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று தொடங்கும் 'நாகை 30' கொண்டாட்டம், வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று காலை நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, மாரத்தான் ஓட்ட ஜோதியை இணை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகள், ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00