ஜப்பான் ஒலிம்பிக் போட்டி - மகளிர் கால்பந்து ஆட்டங்கள் : உலக சாம்பியன் அமெரிக்கா ஸ்வீடனிடம் அதிர்ச்சி தோல்வி

Jul 22 2021 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில், உலக சாம்பியன் அமெரிக்கா, 3 கோல் வித்தியாசத்தில் ஸ்வீடனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் பேஸ்பால், கால்பந்து போட்டிகள் நேற்றே தொடங்கி விட்டன. இதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மகளிர் கால்பந்து போட்டியில், "G" பிரிவுக்‍கன ஆட்டத்தில், ஃபிபா மகளிர் உலக கோப்பை நடப்பு சாம்பியன் அமெரிக்காவை, ஸ்வீடன் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சுவீடன் வீராங்கனைகள் அனல் பறக்‍கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி அமெரிக்‍காவை திணறடித்தனர். இறுதியில், ஸ்வீடன் அணி, 3-க்‍கு பூஜ்ஜிசுயம் என்ற கோல் கணக்கில் உலக சாம்பியன் அமெரிக்காவை வீழ்த்தியது.

"E" பிரிவின் முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து - சிலி மகளிர் அணிகள் மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. "F" பிரிவில் உள்ள பிரேசில் அணியை சீனா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பிரசில் வீராங்கனைகளின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்‍க முடியாமல் சீன வீராங்கனைகள் திணறினர். இறுதியில் பிரசில் அணி, 5-க்‍கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சீனாவை பந்தாடியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00