டோக்கியோவில் நாளை தொடங்கும் ஒலிம்பிக் திருவிழா : கொரோனா ஆபத்தை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jul 22 2021 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

உலக விளையாட்டுத் தினமான ஒலிம்பிக்‍ போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்‍கியோவில் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது என கூறிய அவர், விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் டெல்டா தொற்றைப் போன்று, மற்றுமொரு ஆபத்தான தொற்றை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00