பாக் ஜலசந்தி கடலில் நீந்தி இலங்கை விமானப்படை வீரர் சாதனை : 50 ஆண்டுகால கின்னஸ் சாதனை முறியடிப்பு

Apr 11 2021 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவர், பாக் ஜலசந்‍தி கடல் பரப்பை நீந்தி கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை விமானப் படை வீரரான ரோசன் அபேசுந்தரே, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 ஆண்டுகால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாக, சாதனை படைக்‍க முடிவு செய்த அபேசுந்தரே, நேற்று அதிகாலையில், தலைமன்னார் ஊர்முனை கடலில் குதித்து நீந்த தொடங்கினார். இந்திய-இலங்கை கடலோரப் பாதுகாப்புப் படை உதவியுடன் நேற்று பிற்பகல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்‍கு வந்தபோதிலும், இந்திய கடற்கரையில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, கடலிலேயே ரோஷனுக்கு அந்நாட்டு வீரர்கள் பழச்சாறு கொடுத்தனர். பின்னர், மீண்டும் நீந்தத் தொடங்கி, இன்று அதிகாலை, அபேசுந்தரே இலங்கை தலைமன்னார் சென்றடைந்தார். இதன்மூலம், முதன்முறையாக 56 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். அபேசுந்தரேவுக்‍கு நீச்சல் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00