இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் பெண் காவலருடன் ஆடிய நடனத்தை டிவிட்டரில் வெளியிட்ட ஐ.சி.சி
Feb 27 2020 8:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் நியூசிலாந்து போட்டிக்கு முன்னர் மைதானத்தில் பாதுகாப்புக்கு இருந்த பெண் காவலருடன் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மகளிர் டி-20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் நியூஸிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்றப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிப் பெற்று முதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் நியூசிலாந்து போட்டிக்கு முன்னர் மைதானத்தில் பாதுகாப்புக்கு இருந்த பெண் காவலருடன் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். ஜெமிமாவின் இந்த நடனத்தை ஐசிசி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வீரர் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேஸன் கில்லஸ்பி ஆகியோர் ஜெமிமாவின் நடனத்தை பாராட்டியுள்ளனர்.