பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் : முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்

Jun 1 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக்‍ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்‍கிய முடிவுகள் எடுக்‍கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகிவுள்ளது.

டெல்லியில் பிரதமர் திரு. மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்‍ கூட்டத்தில், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், சட்டத்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை படிப்படியாக நீக்‍குவது, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம், விவசாயக்‍ கடன், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்‍கப்பட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ள ஏழை மக்‍களுக்‍கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்‍கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்ப்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00