2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு - 16 மொழிகளில் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்

Nov 19 2019 9:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 மொழிகளில் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில், மொபைல் செயலியை பயன்படுத்துவது குறித்து, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.நித்யானந்த ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், தரவு சேகரிப்புக்கு மிக்ஸ் மோட் அணுகுமுறை பின்பற்றப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

2020 ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடமைப்பு பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 09ம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை மக்கள் தொகை கணக்கீடு என இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

16 மொழிகளில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் எனவும், இதற்காக 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் செலவாகும் என செலவு நிதி குழு கணக்கிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கணக்கீட்டாளர்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மொபைல் ஆப் மூலம் நேரடியாக தரவைச் சேகரித்து சமர்ப்பிக்கலாம் அல்லது அவர்கள் காகித அட்டவணையைப் பயன்படுத்தி தரவைச் சேகரித்து மொபைல் ஆப் மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும் திரு.ராய் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00