ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்கு : அமலாக்‍கத்துறை கட்டுபாட்டில் ப.சிதம்பரத்தை விசாரிக்க நாளை தீர்ப்பு

Oct 14 2019 8:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுமீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா அந்நிய முதலீட்டை பெற முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், அதற்கு கைமாறாக மகனுடைய நிறுவனங்களில் முதலீடு பெற்றதாகவும், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி வரை அவரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ப.சிதம்பரத்தை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்காக ப.சிதம்பரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை சார்பில், மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், ப.சிதம்பரம் தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாளை தீர்ப்பளிப்பதாகக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00