பிறந்தநாளையொட்டி, தாயார் ஹீராபென்னின் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி - மதிய உணவை, உட்கொண்டு மகிழ்ச்சி

Sep 17 2019 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது பிறந்தநாளை ஒட்டி, தாயார் ஹீராபென்னின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றதுடன், மதிய உணவை, அவருடன் சேர்ந்து உட்கொண்டார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக அவர் நேற்று இரவு தனி விமானம் மூலம் குஜராத்துக்கு வருகை தந்தார்.

நர்மதா மாவட்டம் கெவடியாவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவை பார்வையிட்ட அவர், அங்கு வண்ணத்துப்பூச்சிகளை பறக்‍கவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சர்தார் சரோவர் அணை, முழு கொள்ளளவை எட்டியதை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தி பூஜையில் பங்கேற்றார்.

பின்னர், குஜராத் தலைநகர் காந்திநகர் சென்ற பிரதமர் திரு. மோடி, அங்கு வசித்துவரும் தனது தாயாரின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றார். அவருடன் சேர்ந்து மதிய உணவை உட்கொண்டு பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனிடையே, பிரதமர் திரு. மோடிக்‍கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை வடமாநில மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மத்தியபிரதேசம் தலைநகர் போபாலில், பா.ஜ.க. தொண்டர்கள் மோடியின் 69-வது பிறந்தநாளை 69 அடி நீள கேக்கை வெட்டி கொண்டாடினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00