அரசு குடியிருப்புகளில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கான சட்டத்திருத்தம் : மத்திய அரசு ஆணை

Sep 17 2019 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு குடியிருப்புகளில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கான சட்டத்திருத்தம் செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மக்களவையின் வீட்டு வசதி குழு, கடந்த ஆகஸ்ட் மாதம் 200 முன்னாள் எம்பிக்கள், அரசு வழங்கிய வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. வீடுகளை காலி செய்ய தவறினால், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பாதிபேர் மட்டுமே காலி செய்துள்ளனர். பலர், உயர் நீதிமன்றங்கள் மூலம் இடைக்காலத் தடை உத்தரவு பெற்று, அதே அரசு குடியிருப்புகளில் இருக்க பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனால், அரசு குடியிருப்புகளில் நீண்ட காலமாக குடியிருப்போரை வெளியேற்றுவதற்காக சட்டத்திருத்தம் செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, சட்டவிரோதமாக குடியிருப்புகளில் தங்கி இருப்பவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், வழக்கு முடியும் வரை மாதந்தோறும் லைசன்ஸ் தொகையை 50 மடங்கு கூடுதலாக அரசுக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கத்தை விட விரைவாக இந்த வழக்குகளை முடித்து, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00