பொருளாதார மந்த நிலை தொடர்பாக மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி

Aug 20 2019 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொருளாதார மந்த நிலை தொடர்பாக மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

திருமதி பிரியங்கா காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டில் செயல்படும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அவற்றின் உற்பத்தியும் தேக்க நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டிய மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மிகவும் அமைதியாக இருக்கிறது - இந்த அமைதி நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார். இத்தகைய பொருளாதார மந்த நிலைக்கு யார் காரணம் என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00