தவறான சிகிச்சையால் பார்வை இழந்த 11 பேர் - இந்தூர் கண் மருத்துவமனை அங்கீகாரத்தை ரத்துசெய்ய உத்தரவு

Aug 17 2019 7:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் கண் மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 11 பேர் கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இந்தூர் கண் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 11 பேரின் கண்பார்வை திடீரென பறிபோனது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில தலைமை மருத்துவ அதிகாரி டாக்‍டர். Pravin Jadia, பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்த மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு 72 மணி நேரத்தில் அறிக்‍கை அளிக்‍க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்‍க 7 பேர் கொண்ட குழு அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் மத்தியப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00