கர்நாடகாவில் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் - குமாரசாமி மறுப்பு : விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர் எடியூரப்பா

Aug 17 2019 9:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் திரு. குமாரசாமி ஆட்சியின் போது, அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதனை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

பெங்களூரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையர் பாஸ்கர் ராவ், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பேசிய தொலைபேசி ஆடியோ அண்மையில் ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து, மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர் உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் திரு. எடியூரப்பா, 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். புகாருக்‍கு முன்னாள் முதலமைச்சர் திரு. குமாரசாமி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்‍கள் சிலர் கூறினர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான திரு. டி.கே.சிவக்குமார், தற்போது, குமாரசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய் எனவும், அவ்வாறு நடக்க வாய்ப்பில்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00