வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தல் - மத்திய சட்ட அமைச்சகத்துக்‍கு தேர்தல் ஆணையம் கடிதம்

Aug 16 2019 8:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பான் எண், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, எரிவாயு சிலிண்டர், செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் முறைகேடுகளை தடுக்க இந்த இணைப்பு அவசியம் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், இதன்மூலம், வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பலமுறை இடம் பெறுவதையும், கள்ள ஓட்டுகளையும் தடுக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்த வசதியாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், மத்திய சட்ட அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00