நாடு முழுவதும் அதிகரித்துவரும் டிஜிட்டல் ஊடக வளர்ச்சி - நடப்பாண்டிலேயே சினிமாத்துறை பின்னுக்‍கு தள்ளப்படும் என ஆய்வில் தகவல்

Jul 24 2019 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா முழுவதும் தற்போது இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து டிஜிட்டல் ஊடகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இண்டர்நெட் எனப்படும் இணைய பயன்பாடு குறித்து பிக்‍கி-இ.ஒய். என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. நாடு முழுவதும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்‍கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இணைய பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக டிஜிட்டல் ஊடகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்‍கிறது. இதன்காரணமாக நடப்பு ஆண்டிலேயே திரைத்துறை பின்னுக்‍கு தள்ளப்பட்டு டிஜிட்டல் ஊடகம் முன்னிலை வகிக்‍கும் என்றும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் டிஜிட்டல் ஊடகத்தின் மதிப்பு 42 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து 16 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்தது. நாடு முழுவதும் செல்பேசி வைத்திருப்பவர்கள் அதிக நேரத்தை சமூக வலைதளங்களுக்‍கு பயன்படுத்துவதே இந்த வளர்ச்சியின் வேகத்துக்‍கு காரணம் என்றும் ஆய்வு தெரிவிக்‍கிறது. இதனால் நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் ஊடகத்தின் மதிப்பு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00