இங்கிலாந்து குடியுரிமை புகாரில் தேர்தலில் போட்டியிட ராகுல்காந்திக்‍கு தடைகோரிய வழக்‍கு - உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

May 9 2019 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதால் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி மக்‍களவை தேர்தலில் போட்டியிட, தேர்தல் ஆணையம் தடை விதிக்கக்‍கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமேதி மற்றும் வயநாடு மக்‍களவை தொகுதிகளில், திரு. ராகுல் காந்தி தாக்‍கல் செய்த வேட்பு மனுக்‍களில், பிரிட்டிஷ் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் தெரிவித்திருந்தார். அந்த ஆவணங்களில், ராகுல், இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இரட்டை குடியுரிமை பெற்றுள்ள ராகுலின் வேட்பு மனுவை நிராகரிக்‍க வேண்டும் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ராகுலின் வேட்பு மனுக்‍கள் தீவிர ஆய்வுக்‍கு உட்படுத்தப்பட்டன. இறுதியில் மனுக்‍கள் ஏற்கப்பட்டன. இதனிடையே, இரட்டை குடியுரிமை பெற்றுள்ள ராகுல், தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்‍க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00