மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வாக்‍களிக்‍கப்போவதாக ஐக்‍கிய ஜனதா தளம் அறிவிப்பு - மத்திய பாரதிய ஜனதா அரசுக்‍கு நெருக்‍கடி

Jan 4 2019 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வாக்‍களிக்‍கப்போவதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்‍கிய ஜனதா தளம் அறிவித்துள்ளதால் மத்திய அரசுக்‍கு நெருக்‍கடி ஏற்பட்டுள்ளது.

முத்தலாக்‍ மசோதாவை சட்டமாக்‍கும் வகையில் திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா, மக்‍களவையில் அண்மையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முத்தலாக் மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வாக்‍களிக்‍கப்போவதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்‍கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்‍கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் வசிஷ்ட நாராயண் சிங், முத்தலாக் மசோதா மிக அவசரமாக நிறைவேற்றப்படுவதாகவும், மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் இந்த திடீர் முடிவு, பாரதிய ஜனதா அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00