மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்‍கைக்‍குப் பின்னர் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்‍கம் அதிகரித்துள்ளது - மத்திய நிதி புலனாய்வு அமைப்பு அதிர்ச்சி தகவல்

Apr 21 2018 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்‍கைக்‍குப் பின்னர் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்‍கம் அதிகரித்துள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் 480 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய நிதி புலனாய்வு அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பை செயல்படுத்தினார். கருப்பு பண ஒழிப்பு என மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்‍கையையடுத்து 500, ஆயிரம் ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்‍கப்பட்டன. புதிய 2 ஆயிரம், 500, 200 ஆகிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த செயல்பாட்டின் மூலம் பெருமளவு கருப்புப் பணம் மற்றும் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வங்கிகளில், கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்‍கம் அதிகரித்துள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் 480 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய நிதி புலனாய்வு அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிதி புலனாய்வு பிரிவு கடந்த 2016-17 ஆண்டில் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தது. இதில் வங்கி மற்றும் மற்ற நிதித்துறைகளில் மூன்றேகால் லட்சம் கள்ளநோட்டு பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அறிக்கை தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2016-2017 ஆண்டில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மற்றும் பல்வேறு நிதித்துறை நிறுவனங்களில் 400 சதவிகிதத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் கள்ளநோட்டு பரிவர்த்தனைகள் 4 லட்சத்து 10 ஆயிரமாக இருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2016-17ம் ஆண்டில் 7 லட்சத்து 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2015-16ல் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் 1 லட்சத்து 5 ஆயிரமாக இருந்த நிலையில், 2016-17ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 3 லட்சத்து 61 ஆயிரத்து 215 பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00