ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாகக்‍ கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு - உண்மை வென்றுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சி

Mar 23 2018 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாகக்‍ கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளதாக டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில், ஆதாயம் அளிக்கும் இரட்டைப் பதவிகள் வகித்ததாக எழுந்த புகாரில் 20 எம்.எல்.ஏக்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை எதிர்த்து, 20 எம்.எல்.ஏக்‍களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்‍கு முடியும் வரை 20 தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்‍கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று கூறி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளதாக டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்தது தவறு என்பதையே இந்த தீர்ப்பு உணர்த்துவதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00