டெல்லியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் : குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள துணை நிலை ஆளுநர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Jan 20 2017 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள துணை நிலை ஆளுநர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் போக்குவரத்து மேலாண்மை பிரச்னை குறித்த ஆய்வுக் கூட்டம் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் நடைபெற்றது. இதில், டெல்லியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரவும், போக்குவரத்து நெரிசலை திறம்பட கையாளும் வகையிலும், பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, சிவப்பு விளக்கு நிறுத்தங்களை மீறிச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் ஒளிப்படக் கருவிகள் மற்றும் நம்பர் பிளேட் ரீடர் ஒளிப்படக் கருவிகள் உள்ளிட்டவற்றை டெல்லி மாநகரின் பல்வேறு இடங்களில் பொருத்துதல், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தல், வாகனங்கள் ஓட்டும் போது செல்ஃபோன்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் டெல்லி காவல்துறை, டெல்லி போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00