ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்லன்வாலாவில் பாகிஸ்தான் ராணுவம் 2-வது நாளாக அத்துமீறல் - இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதால், எல்லையில் பதற்றம்

Oct 1 2016 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் 2-வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவருவதால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். Surgical Strikes என்று அழைக்கப்படும் இந்த துல்லிய தாக்குதல் மூலம், பூஞ்ச் மற்றும் உரியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நீடிப்பதால், அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டனர். எல்லைப்பகுதியில் ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலம், அக்னூர் மாவட்டத்தில் பல்லன்வாலா, சப்ரியர், சம்னம் உள்ளிட்ட பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி 2-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல்லன்வாலா பகுதியில், அதிகாலை 4 மணி முதல் இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடையே துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00