Scorpene நீர்மூழ்கி கப்பல் தொடர்பான விவகாரம் - ரகசிய ஆவண குறுந்தகடை வரும் 29-ம் தேதி ஆஸ்திரேலிய அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல்

Aug 27 2016 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த Scorpene நீர்மூழ்கி கப்பல் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்கள் அடங்கிய குறுந்தகடை, வரும் திங்களன்று ஆஸ்திரேலிய அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக, இந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட "The Australian" என்ற நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நாட்டின் DCNS என்ற நிறுவனம் 23,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 Scorpene நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைத்து, மும்பையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் இந்த ஆண்டு இறுதியில் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் தொடர்பான, சுமார் 24 ஆயிரம் பக்க ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "The Australian" என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

1970-ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பணியில் இருந்து விலகிய பிரான்ஸ் கடற்படை அதிகாரி, அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, பின்னர் DCNS நிறுவனத்தின் துணை ஒப்பந்ததாரராக செயல்படத் தொடங்கினார். இவரும், இவருடைய நண்பரும் இந்த நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்களை திருடியதாகவும், தென் கிழக்கு ஆசிய நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர்கள் பணியில் சேர்ந்தபோது இந்த ரகசிய ஆவணங்களை கணிப்பொறியில் சேமித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்களிருவரும் பணிநீக்கம் செய்யப்படவே இந்த ரகசிய ஆவணங்கள், சிங்கப்பூரிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனுடைய முக்கியத்துவம் அறியாத அந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப தலைமை அதிகாரி, பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த ஆவணக்கோப்பினை குறுந்தகட்டில் பதிவு செய்து, இணையதளம் மூலமாக சிட்னியில் வசிக்கும் ஒருவருக்கு 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி அனுப்பிவைத்ததாக "The Australian" நாளிதழ் தெரிவித்துள்ளது. அந்த நபர் மூலமாகவே நீர்மூழ்கி கப்பலின் திறன் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக அந்நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தச்சூழ்நிலையில், இந்தியாவுக்காக பிரத்யேகமாக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த Scorpene நீர்மூழ்கி கப்பல் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்கள் அடங்கிய குறுந்தகடு, நாளை மறுநாள் ஆஸ்திரேலிய அரசிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக, இந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட "The Australian" என்ற நாளிதழ் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00