தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் உயிரிழக்கும் பொதுமக்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Aug 25 2016 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் உயிரிழக்கும் பொதுமக்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின்போது துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை முதல்முறையாக 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக இணையமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலும், நக்சல் தீவிரவாதம் அல்லது தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை பொருந்தும் என்றும் அவர் கூறினார். தவிர, வெடிகுண்டு சம்பவங்கள், சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்ககான இழப்பீட்டுத் தொகையும் 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும், தாக்குதலின் போது 50 சதவீதத்திற்கும் மேலான ஊனமடைவோருக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தவிர, நாடு முழுவதும் 24,374 கோடி ரூபாய் மதிப்பிலான 9 ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டது என்றும் திரு. ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00