M.B.B.S. மற்றும் B.D.S. படிப்பிற்கான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு குறித்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - தமிழகத்தின் கருத்துகளையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல்

May 28 2016 5:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

M.B.B.S. மற்றும் B.D.S. படிப்பில், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை, நடப்பு கல்வியாண்டிற்கு ஒத்திவைத்து மத்தியஅரசு கொண்டு வந்த அவசரச்சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரும் வழக்கில், தமிழகத்தின் கருத்துகளையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

M.B.B.S. மற்றும் B.D.S. படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு, தேசியஅளவில் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என இந்திய மருத்துவ குழுமம், மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இச்செயல், மாநில அரசுகளின் உரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும், கிராமப்புற ஏழை-எளிய மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எச்சரித்திருந்தார். இந்நிலையில், இந்திய மருத்துவ குழுமத்தின் கருத்தினை ஏற்று உச்சநீதிமன்றமும் தேசியஅளவில் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அதனை நிராகரிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதங்கள் எழுதினார்.

அதனையடுத்து, M.B.B.S. மற்றும் B.D.S. படிப்புகளில் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடப்பு கல்வியாண்டிற்கு நிறுத்திவைத்து மத்தியஅரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தின்படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு மட்டும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என அறிவித்தது. இந்த அவசர சட்டத்தில், பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுமையாக மறுக்கவில்லை என்றும், பொது நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த அவசர சட்டத்திற்கு தடை விதித்தால் குழப்பம் ஏற்படும் என்பதால், தற்போது இதற்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தமிழகத்தின் கருத்துகளையும் கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி, தமிழக அரசு சார்பில் நேற்று கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00