பருவமழை குறைந்ததால் மேற்கு வங்கத்தில் தேயிலை உற்பத்தி கடும் பாதிப்பு : தேநீர் உள்ளிட்ட பானங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் அச்சம்

Feb 5 2016 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவமழை குறைந்ததால், மேற்கு வங்கத்தில் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அஸ்ஸாமுக்கு அடுத்தபடியாக, மேற்கு வங்க மாநிலத்தில்தான் தேயிலை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலை விளைச்சலுக்கு கணிசமான மழை தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை குறைந்துள்ளதாலும், வெப்பநிலை அதிகரித்ததாலும், மேற்கு வங்கத்தில் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிலிகுரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராகி இருந்த தேயிலை செடிகளில், இலைகள் கருகியும், பூச்சிகள் தாக்கியும் காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் போதிய மழை பெய்யாததால், தேயிலை உற்பத்தி 8 சதவீதம் அளவுக்கு குறைந்தது. இந்த ஆண்டு தேயிலையின் உற்பத்தி மேலும் குறையும் என்பதால், தேநீர் உள்ளிட்ட பானங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக, வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00