பருவமழை தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்ப்பு - நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. தகவல்

Dec 2 2015 2:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் கடந்தமாத தொடக்கத்திலிருந்தே கனமழை பெய்து, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ள போதிலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அரசு நிர்வாகத்தை முழுவீச்சில் முடுக்கிவிட்டு, மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால், பெருமளவு உயிரிழப்பும், சேதங்களும் தவிர்க்கப்பட்டதாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய நீலகிரி தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் C. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், மழையால் பாதிப்புக்குள்ளான தமிழகத்தை, பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்து, முதலமைச்சர் கோரியுள்ளதன் அடிப்படையில் மத்திய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதலளித்துப் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு. ராதாமோகன் சிங், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மனுவும், வெள்ள சேதங்களை ஆய்வுசெய்த மத்திய குழுவின் அறிக்கையும், மத்திய அரசிடம் வரப்பெற்று, வேளாண் அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00