ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி கிராமிய நடனமாடினர் : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது

Oct 28 2015 8:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஒரே இடத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி கிராமிய நடனமாடினர். இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை நிகழ்த்துவதற்காக, ஹிமாச்சலப்பிரதேசம் Kullu மாவட்டத்தில் மாபெரும் கிராமிய நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண் சிசுக்கொலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், இந்த நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ''மகள்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்'' என்ற கருத்தை மையமாகக் கொண்டு, ஒரேஇடத்தில் நடைபெற்ற இந்த மெகா நடன நிகழ்ச்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு கிராமிய நடனங்களை ஆடியது கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. இந்த நடன நிகழ்ச்சியின் அடையாளமாக வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஏராளமான பார்வையாளர்கள் குழந்தைகளுடன் கண்டுகளித்தனர். இந்த நடன நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00