ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் : ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு

Aug 29 2015 9:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஒப்பந்தம், ZIQITA HEALTH CARE என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம், மற்றும் அப்போதைய ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெல்லாட், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஜெய்பூர் நகரில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது நடைபெற்று வந்த அசோக் கெல்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அகன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்த ராஜஸ்தான் அரசு பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம், அசோக் கெல்லாட், சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.ஏ. கான், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00