இந்தியா - பங்களாதேஷ் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் நாளை கையெழுத்து - இந்தியாவுக்கு கூடுதலாக சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாகும்

Jul 31 2015 6:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - பங்களாதேஷ் இடையேயான எல்லைப் பகுதிகளைப் பிரித்து, மறுவரையரை செய்துகொள்வதற்கான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.

இந்தியா - பங்களாதேஷ் இடையே கடந்த 1974-ம் ஆண்டு முதல் எல்லைப் பகுதியை பிரித்துக்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை இந்தியாவுக்குட்பட்ட பகுதிகள் பங்களாதேஷுக்குள்ளும், பங்களாதேஷுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் இந்தியாவுக்குள்ளும் உள்ளன. இவற்றை சீரமைத்து, நிரந்தர வரையரை செய்து, எல்லைப் பகுதியை ஏற்படுத்தும் நடைமுறை இதுவரை இல்லாததால் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

எல்லையை சீரமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் அதிபர் ஷேக் ஹசீனா ஆகியோரிடையே சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் நாளை முறைப்படி தொடங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குள் 51 பகுதிகளில் உள்ள 7,110 ஏக்கர் நிலங்கள் பங்களாதேஷுக்கும், பங்களாதேஷில் 111 பகுதிகளில் உள்ள 17,160 ஏக்கர் நிலங்கள் இந்தியாவிடமும் ஒப்படைக்கப்பட உள்ளன.

மேலும், இரு நாட்டிலும் வசிக்கும் மக்கள் எந்த நாட்டிற்கு குடியேறுவது என்பது குறித்து முடிவு செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தற்போது பங்களாதேஷில் வசித்துவரும் 14 ஆயிரம் பேர் இந்திய குடியுரிமை பெறுவார்கள் என தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00