ஒடிசா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு - கடலோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

Jul 29 2015 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலத்தையொட்டிய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, அம்மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை-வெள்ளம் காரணமாக, Baitarani உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில், கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், Baitarani, Subarnarekha உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையால் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதி மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். Mayurbhanj மாவட்டம் மழை காரணமாக மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும், மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால், Baripada பகுதி முடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒடிசா மாநில அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தீயணைப்புத் துறையினரும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, வங்களாதேஷ் - மேற்குவங்க எல்லைக்கு அருகே, வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதன் காரணமாக, மழை தொடரும் என புவனேஸ்வர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00