ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் திடீரென பற்றிய தீயில் 16 கார்கள் எரிந்து சேதம் : தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
May 31 2023 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் திடீரென தீப்பற்றியதில், 16 கார்கள் எரிந்து சாம்பலாகின. ஹைதராபாத்தின் LB நகர் பகுதியில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் இரவு நேரத்தில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியது. இதில், பல கார்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.