மும்பையில் தொடரும் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - இன்னும் 2 தினங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Jul 6 2022 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பேருந்து, ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இன்னும் இரு தினங்களுக்‍கு மும்பை, மத்திய மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும் என்றும், எனவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு எச்சரிக்‍கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றக் கோரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷிண்டே, உயிரிழப்புகளை தவிர்க்க, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00