உலகளாவிய அமைதியின்மை மற்றும் மோதல்களுக்கு மத்தியில் உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்

May 19 2022 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளாவிய அமைதியின்மை மற்றும் மோதல்களுக்கு மத்தியில், இந்தியா உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதாக பிரதமர் திரு. மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வதோதராவில் நடைபெற்ற 'யுவ சிவிர்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். இளைஞர்களை சமூக பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த ஒரு சமுதாயத்தின் அடித்தளமும் வளர்ச்சியும் அதன் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை நமது துறவிகளும், வேதங்களும் நமக்குக் கற்பித்துள்ளதாக குறிப்பிட்டார். வளமான கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றிய புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அனைவரும் ஒரு கூட்டுத் தீர்மானத்தை எடுத்துக்‍கொண்டு, புதிய இந்தியாவை உருவாக்க முயற்சிப்போம் என தெரிவித்தார். புதிய சிந்தனை மற்றும் பழமையான கலாச்சாரத்துடன் இணைத்து இந்தியா முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உலகிற்கு வழங்கியது முதல், உலகளாவிய அமைதியின்மை மற்றும் மோதல்களுக்கு மத்தியில், அமைதிக்கான ஒரு திறமையான தேசமாக உலகின் புதிய நம்பிக்‍கையாக இந்தியா திகழ்வதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00