இந்தி கற்றுக்கொள்ள அறிவுரை கூறிய ஊழியர் விவகாரம் : சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் கருத்து

Oct 19 2021 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் இன்னும் கூடுதலாக சகிப்புத்தன்மை தேவை எனவும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டதாகவும் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் நேற்று சொமோட்டோவில் உணவை ஆர்டர் செய்துள்ளார். உணவு விநியோகித்தவர் தவறாக விநியோகித்ததாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர் அழைத்துள்ளார். அப்போது அந்த அதிகாரியிடம் பேசிய விகாஷ், இந்தி தெரியாது எனக்கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அந்த அதிகாரி, இந்தி தேசிய மொழி என்பதால், இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளர். இந்த உரையாடலை விகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு டிவிட்டரில் கடும் கண்டங்கள் எழுந்தன. இதனிடையே, சொமோட்டோ நிறுவனத்தின் பங்குகள் சரமாரியாக சரிந்தன. இந்த சர்ச்சை குறித்து டிவிட்டரில் மன்னிப்பு கேட்ட சொமோட்டோ நிறுவனம், தமிழில் அறிக்கை வெளியிட்டது. அதில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை பணிநீக்கம் செய்து விட்டதாகவும், உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளம் என்பதை புரிந்துக்கொண்டுள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்தியாவில் இன்னும் கூடுதலாக சகிப்புத்தன்மை தேவை என்றும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டதாகவும் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் டிவிட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00