லக்‍கிம்பூர் சம்பவத்தில் விவசாயிகள் கொலைக்‍குக்‍ காரணமான இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - பாரதிய கிசான் சங்கம் திட்டவட்டம்

Oct 19 2021 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

லக்கிம்பூர் சம்பவத்தில் விவசாயிகள் கொலைக்கு காரணமான, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கைது செய்யப்படும் வரை, தங்களது போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் சங்க தலைவர் திரு.ராகேஷ் திகெய்த் திட்டவட்டமாக தெரிவித்தார்.

லக்‍கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்‍கம் செய்ய வலியுறுத்தியும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாரதிய கிசான் சங்க தலைவர் திரு.ராகேஷ் திகெய்த், அஜய் மிஸ்ரா கைது செய்யப்படும் வரை, ரயில் மறியல் மட்டுமல்லாமல், பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார். கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஜய் மிஸ்ரா, பொதுவெளியில் சாதாரணமாக நடமாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவர் வழக்கு விசாரணையை தனக்கு சாதகமாக திசைதிருப்பக்கூடும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு, அவரை பதவி நீக்க செய்ய வேண்டும் என்றும், குற்றமற்றவர் என நிரூபித்த பின்னர் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் திரு.ராகேஷ் திகெய்த் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00