நீளும் பெகாசஸ் உளவு பட்டியல் : அனில் அம்பானியின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டது அம்பலம்

Jul 24 2021 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஃபேல் விவகாரம் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பலர் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக The wire இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டவர்களின் பெயர்களை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ராகுல்காந்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தலாய்லாமாவின் ஆலோசகர்கள் என இந்த பட்டியல் நீளுகிறது. தற்போது தொழிலதிபர் அனில் அம்பானி, மத்திய அரசால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா ஆகியோரது தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக the wire இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஃபேல் விமானங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகவும், ரஃபேல் விமாங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம், அத்துறையில் அனுபவமே இல்லாத அனில் அம்பானியின் Reliance defence நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது குறித்தும் கடந்த 2019-ம் ஆண்டு, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த சமயத்தில்தான் அனில் அம்பானி, டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி வெங்கட ராவ் போசினா என இவ்விவகாரத்தில் தொடர்புடைய பலரது தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக, the wire இணையதளம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00