மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பருவமழை மேலும் தீவிரம் - கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Jul 23 2021 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்துவரும் நிலையில், கடலோர மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்‍கு கனமழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தானே, பால்கர், ரத்தினகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்‍கெடுத்து ஓடுகிறது. இதனால் மும்பைக்‍கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் 4 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளம் பாதித்த கடலோரப் பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன், கடற்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை புறநகர் பகுதியான பிவாண்டியில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்‍கித் தவித்தவர்களை தேசிய பாதுகாப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். புனேவின் கடக்வஸ்லா அணை நிரம்பி வழிவதால், அப்பகுதியை சுற்றி வசித்து வரும் மக்‍கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான பீமாசங்கர் கோயிலும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனிடையே, மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்‍கு கனமழை நீடிக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00