கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு - உடல்களை தொடாமல் மத சடங்குகளை நடத்த அனுமதி

May 15 2021 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதிக்கப்பட்டு இறப்பவரின் உடலை கண்ணியமாக அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.

கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழலில், ஏராளமானோர் வைரஸ் தொற்றால் உயிரிழகின்றனர். அவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அதில், உடல்கள் வரிசையாக காத்திருப்பதை தடுக்க தற்காலிக தகன மேடைகளை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரியூட்டு மேடை, இடுகாட்டில் பணிபுரியும் ஊழியகளுக்கு சடலங்களை கையாள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சடலங்களை தொடாமல் இருக்கும் மதசடங்குகளை நடத்த அனுமதி அளிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் கண்ணியத்தை மீறும் வகையில் மொத்தமாக சடலங்களை அடக்கம் செய்யவோ எரியூட்டல் செய்யவோ கூடாது உள்ளிட்ட வழிகாட்டு அறிவுரைகளை தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00