பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வர இதுவரை ஆலோசிக்கவில்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எழுத்துப் பூர்வமாக பதில்

Mar 9 2021 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு இதுவரை பரிந்துரை செய்யவில்லை என மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியுள்ளது. பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரி விதிப்பதை தவிர்த்து, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர, ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரை அவசியம் எனவும், இதுகுறித்து மத்திய அரசு இதுவரை பரிந்துரைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00